வாழ்க்கையில் உயர நாம் என்ன செய்யவேண்டும்?

கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

உங்களை கர்த்தருடைய வசனத்தின் மூலமாக சந்திக்கச் செய்த என் தேவனை மனப்பூர்வமாக ஸ்தோத்தரிக்கிறேன்.

இன்று நாம் தாவீது எப்படி வெற்றி வாழ்க்கை வாழ்ந்தான்.

அல்லது எப்படி வெற்றி பெற்றான் என்று ஒரு சில வசனத்தின் மூலமாக காண்போம்.

மேல்ப்படிக்கு போகவேண்டுமால் முதலில் நாம் கீழ்ப்படிதல் அவசியம்.

அநேகர் இன்று உயர வேண்டும் என ஆசை உண்டு. ஆனால் அதற்காக உழைக்க நேரமுமில்லை மனமுமில்லை.

ஆனால் தாவீது அப்படியில்லை.

அதற்காக அதிக நேரம் செலவழித்தான், கடின உழைப்பு உழைத்தான்.

எல்லாவற்றையும் விட தான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்றும் அவருடைய நாமமும் அதின் வல்லமையையும் அறிந்திருந்தான்.

அதையே பரிசுத்த பவுல் நமக்காக இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1:12 – ல் ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.

தாவீது கர்த்தரை எப்படி அறிந்திருந்தான்?

1,            சங்கீதம் 27:1 – கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?

மனிதர்களாகிய நாம் வெளிச்சத்தைப் பார்த்து அல்லது வெளிச்சத்தில் நடப்போம். தாவீதோ தேவனையே தனக்கு வெளிச்சமாகக் கொண்டான். தனக்கு ரோல் மாடலாக, ஹீரோவாக கண்டிருந்தான்.

நான் வெளிச்சத்திலே நடக்கிறேன். ஆகையினால் நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்று தைரியமாய் நடந்தான்.

இன்று நம்மில் அநேகர் தாவீதைப் போல தைரியமாக சொல்ல முடியாமல் மனிதர்களைக் கண்டு பயந்து பயந்து வாழ்கிறோம். ஏனென்றால் நாம் நம்முடைய பார்வையை தேவன் மேல் வைக்காமல் யார் யார் மீதெல்லாமோ வைக்கிறோம். ஆகையினால் பயப்படுகிறோம்.

2,            சங்கீதம் 27:1 – கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?

என் ஜீவன் அவருக்குள் மறைந்திருக்கிறது.ஆகையினால் அவர் அறியாமல் என்னை எவருமே தொட முடியாது என்பதிலே தெளிவாயிருந்தான். ஆகையினால் தான் யுத்தத்திலே தன்னைவிட பெலசாலியான கோலியாத்தைக் கண்டோ? அல்லது அவனுடைய சேனைகளைக் கண்டோ? அவன் பயப்படாமல்,

சாமுவேல் 17:45. பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

சாமுவேல் 17: 37 ல் என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்ல முடிந்தது.

ஆனால் நாமோ ஒரு சிறு வியாதியைக் கண்டு மிகவும் பயந்து சோர்ந்து விடுகிறோம். போராடாமலே தோல்வியை ஒத்துக் கொள்ளுகிறோம்.

3,            சங்கீதம்  23  ல் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;  நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்

கர்த்தர் தனக்கு நல்ல மேய்ப்பராக தன்னோடு இருக்கும் போது எந்த எதிரியோ, பிசாசோ, வியாதியோ, பிரச்சனைகளோ, எது வந்தாலும் என்னை அது அணுகிடாமல் தனக்கு பாதுகாப்பாய் இருந்து குறைவுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கு தக்கதாக நிறைவாக்குகிறவர் என்று அறிந்திருந்தான்.

ஆகையினால் பிசாசு அவனுக்கு விரோதமாக ராஜாவை, நண்பர்களை, பிள்ளைகளை எழுப்பிவிட்டாலும், அவன் கர்த்தரையே சார்ந்து வாழ்க்கையிலே வெற்றிப் பெற்றான்.

எல்லாவற்றைப் பார்க்கிலும் தாவீது:-

4,            சங்கீதம் 34: 1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

சங்கீதம் 34: 8. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

தாவீது எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். கர்த்தர் நல்லவர் என்பதை எல்லா நாளிலும் ருசித்துக் கொண்டிருந்தான்.

எனவேதான் கர்த்தர் சொன்னார், 1 சாமுவேல் மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். ஆகவேதான் கர்த்தர் தாவீதை என் இருதயத்துக்குப் பிரியமானவாகக் கண்டேன் என்று சொல்லி அவனோடு இருந்ததார். தாவீது செய்ததெல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். அவன் கடந்து போன எவ்விடங்களிலேயும் ஜெயத்தொடு திரும்பும்படி கர்த்தர் செய்தார்.

ஆகவே இந்த வசனத்தை கேட்கிற நாமும் கர்த்தரை எல்லா காலத்திலும் துதித்து அவரை ருசித்து, நம்மை இரட்சித்தவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்து விசுவாசித்து வாழுவோம். நம்மையும் ஜெய வாழ்க்கை வாழச் செய்வார்.

கர்த்தர் நம் ஒவோருவரையும் ஆசீர்வதிப்பாராக.!

ஆமென்.!!!

எஜமானுக்கு பிரயோஜனமான பாத்திரம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக!

நம்முடைய வீடுகளில் நாம் அநேக பொருட்கள் மற்றும்  பாத்திரங்கள் வாங்கி வைத்திருக்கிறோம்.

அதில் பல விலையில்லாத பொருட்களும், சில விலையுள்ள பொருட்களும் அடங்கும்.

அதிக விலையுள்ள பொருளாய் இருந்தாலும்  கொஞ்சங்கூட மதிப்பில்லாத பொருட்களும் உண்டு.

அதிக விலையில்லாத பொருளாயிருந்தாலும், மிகவும் மதிப்புள்ள பொருட்களும் உண்டு.

இன்று நாம் வேதத்திலிருந்து ஒரு பாத்திரத்தை பார்ப்போம். 2 தீமோத்தேயு 2:21இல் நான் உங்களுக்காக வாசிக்கிறேன், ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான் என்று எழுதியிருக்கிறது.

ஆகையினால் நாம் வாசித்த வசனத்தில் பார்த்தது, எஜமானன் எந்த நற்கிரியையும் செய்ய உபயோகிக்க பரிசுத்தமாக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்ட கனத்திர்க்குரிய ஒரு பாத்திரம்.

உதாரணமாக தண்ணீர் குடிக்கும் அல்லது தண்ணீர் கொடுக்கும் ஒரு குவளை அதாவது செம்பு.

தமிழர் பண்பாட்டில் நாம் அனைவரும் நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலாவது கொடுப்பது ஒரு செம்பு தண்ணீர் தான். இங்கேயும் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாத்திரமும் நன்றாக கழுகிய பின்பே தண்ணீர் பிடித்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் பெருகும் என்று சொல்லுவார்கள்.

ஆகவே வீடு தேடி வருபவர்களுக்கு வேறு ஒன்றும் கொடுக்காவிட்டாலும் வெறும் தண்ணீர் கொடுத்தாவது புண்ணியம் தேடிக்கொள்பவர்கள் நம்மிலும் அநேகர் உண்டு.

நாம் தண்ணீர் குடிக்கும்  செம்பை அடிக்கடி சுத்தம் செய்து எப்போதும் ஆயத்தமாகவே வைத்திருப்போம் . ஏனென்றால் அதை நாம் பயன்படுத்தும்போதோ அல்லது பிறர் பயன்படுத்த நாம் கொடுக்கும்போதோ அதில் மாசு தூசி இல்லாமல் கழுகி தூய்மையானதாகவே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே.

அது போலத்தான் நம்மைக் குறித்தும் தேவன் விரும்புகிறார்.

முதலாவது, நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.

இரண்டாவது, வேதத்தில் தேவன் அநேகரை உபயோகித்திருக்கிறார். உதாரணத்திற்கு மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்க கிதியோனை பயன்படுத்தினார், பெலிஸ்த்தியனிடமிருந்து இஸ்ரவேலரை காப்பாற்ற தாவீதை பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் அநேகரைச் சொல்லலாம்.

 இவர்களைப் போல நம்மையும் தேவன் பயன்படுத்த நாமும் உபயோகமானவர்ளாக இருக்கவேண்டும்.

மூன்றாவது, எபேசியர் 2 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனத்தில் எழுதியிருக்கிறப்படி நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்க்காகவே கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறோம். ஆகையினால் எந்த நற்கிரியைக்கும்  ஆயத்தமாக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.

நான்காவது, அது போல மத்தேயு  25:21 ஆம் வசனத்தில்
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று தேவன் சொல்லி நம்மை கனம் பண்ணுகிறதற்கு பாத்திரவான்களாக நாம் நடக்க வேண்டும். விசுவாசிகள் நமக்கு கிடைத்த கொஞ்ச நாட்களில், வேலையில் குறைந்த  சம்பளமானாலும், தொழிலும் குறைந்த வருமானமாலும், தேவைகள் சந்திக்கப் படாவிட்டாலும் கர்தருடைய வேலையில் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக உழைக்க வேண்டும்.  அதுப் போல சபை ஊழியர்கள் சபைக்குப் போதுமான ஆத்துமாக்கள் கிடைத்துவிட்டது. இனி போதுமென்று இருந்து விடாமல் இன்னும் ஆதியிலிருந்த அதே துடிப்புடன் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்போது தான் தேவன் நம்மை உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே என்று  கனம்பண்ணுவார்.

கடைசியாக, இவையெல்லாம் எப்போது நடக்குமென்றால் 2 தீமோத்தேயு 2:21இல் எழுதப்பட்டபடி “ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு”,

எவைகளை விடவேண்டும்?

இந்த அதிகாரத்தில் முந்தைய வசனங்களில் எழுதப்பட்டிருக்கின்ற சீர்கேடான வீண்பேச்சு, கள்ளப்போதனை,  அவபக்தி, சத்தியத்தை விட்டு விலகுதல், மற்றவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுதல் ஆகிய இவைகளை விட்டு விலகவேண்டும்.

அடுத்து “தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்”.

இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் நம்மை இன்னும் எதினால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டுமென்றால், சங்கீதம் 119 : 9 இல் சொல்லப்பட்டது போல இயேசு கிறிஸ்துவின் வசனத்தினால் காத்துக்கொண்டு நம்மை சுத்திகரித்துக் கொள்ளவேண்டும்.

 பிலிப்பியர் 2ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டதுப் போல ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

இப்படிச் செய்வோமானால் நாம் 2 தீமோத்தேயு 2:21இல் குறிப்பிட்டிருக்கிறது போல பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்போம். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் அவருடையப் பார்வையில் கனத்திற்க்குரியவர்களாக மாற்றுவாராக! ஆமென்!

Our Mission

To run into the people of all backgrounds and all nation with the love of Calvary, work with dedicated and bring people into the presence of Jesus Christ.  

And lead them to make a personal relationship with Jesus Christ.

கல்வாரி அன்பினால் அனைத்து பின்னணியுள்ள அனைத்து தேச மக்களிடமும் அர்ப்பணிப்புடன் ஓடிச்சென்று, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் கொண்டு வருவது.

இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் வந்த அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவு ஏற்பட வழிநடத்துவது.

Our Vision

Judges 6:14

And the LORD looked upon him, and said, go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?

(நியாயாதிபதிகள் 6:14)

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப்பலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.